விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் குற்றம் சாட்டும் மணமகன் வீட்டார், அதற்கு பதில் கொடுக்கும் இளம் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது.

இன்றைய இளம் பெண்கள் அதிகமாக டிமாண்ட் வைப்பதாகவும் பெண் கிடைப்பதில்லை என்றும் மாப்பிள்ளை வீட்டார் குற்றம் சாட்டுகின்றனர். தற்போதைய இளம் பெண்கள் எந்த துறையினை சேர்ந்த மாப்பிள்ளையை அதிகம் தேர்வு செய்கிறார்கள் என்ற நிகழ்வையும் கோபிநாத் வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஏழைப் பெண் ஒருவர் தனக்கு இதனால் வரைக்கும் வந்த மாப்பிள்ளை அனைத்தும் 32 இல் இருந்து 34 வயது உள்ளவர்கள் தான் வருவதாக கூறி கண் கலங்கினார். இதற்கு கோபிநாத் சரியான பதிலடி கொடுத்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.