இந்தி, தெலுங்கு பட நடிகை ஆயிஷா ஜூல்காவுக்கு விலங்குகள் என்றால் பிரியம். இவர் உயிராக வளர்த்த ராக்கி என்ற நாய் 2020ல் இறந்தது. பங்களா பராமரிப்பாளராக இருந்த ஆண்ட்ரூ நாயை கொன்றதாக ஆயிஷா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரேத பரிசோதனையில் நாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரிந்தது.

ஆண்ட்ரூவை போலீசார் கைது செய்த 2 நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் 4 ஆண்டுகள் ஆகியும் வழக்கு இழுத்தடிக்கப்படுவதாக மும்பை நீதிமன்றத்தில் ஆயிஷா மனு அளித்துள்ளார்.