உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புத்தக விற்பனை மையத்தை சென்னையில் திறந்து வைத்தார். அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, அரசியலையும் கலாச்சாரத்தையும் தனித்தனியாக வைத்திருக்கக்கூடிய சூழலில் நாம் இருக்கிறோம். நான் அரசியல், ஆள்பவர்கள் என்ற வார்த்தைகளே இருக்கக் கூடாது என நினைக்கிறேன்.

அதன் பிறகு என்னுடைய மிகப்பெரிய அரசியல் எதிரியே ஜாதி தான். நான் இதை 21 வயதில் இருந்து சொல்லி வரும் நிலையில் தற்போது தான் எனக்கு அதை பலமான வார்த்தைகளில் சொல்லும் அனுபவம் வந்திருக்கிறது. அரசியலில் இருந்து ஜாதியை நீக்க வேண்டும் என அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் நடந்த பாடில்லை என்று கூறியுள்ளார்.