டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணியை, அயர்லாந்து அணி முதன்முறையாக 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளது.
பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 182 ரன்கள் குவிக்க, அடுத்து ஆடிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா (49 ரன்கள்) தவிர மற்ற மூத்த வீரர்கள் சொதப்பியதால் வெறும் 148 ரன்களுக்கு பெற்றது.
இந்தியாவின் இந்த கடைசி விக்கெட் விழுந்ததும் இங்கிலாந்தில் மகளிர் உலகக் கோப்பையில் விளையாடிவரும் அயர்லாந்து பெண்கள் அணியும் திரண்டு வந்து இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Meanwhile, in Bristol…
Ireland Women gathered around to watch the final over… and witness history! ☘️#BackingGreen | #IREvIND | #FailteSolar | #Evara pic.twitter.com/VE18HHQQNL
— Cricket Ireland (@cricketireland) June 26, 2026
“>
கேப்டன் லோர்கன் டக்கரின் அதிரடித் தொடக்கத்தால் அயர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ள சூழலில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்றால் ஒயிட்வாஷ் ஆகிவிடும் என்பதால், முதல் போட்டியில் சொதப்பிய சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கக் கூடிய ‘அந்த’ 15 வயது இளம் புயல் வைபவ்சூர்யவன்ஷியை அணியில் களம் இறக்க கௌதம் காம்பீர் அதிரடி பிளான் போட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சஸ்பென்ஸை எகிற வைத்துள்ளது.
