தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த் ரவியுடன் சேர்ந்து தற்போது நடித்துள்ள வெப்பன் திரைப்படம் வருகின்ற 23ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் ஒரு விஷயம் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது, நான் நிறைய தவறான முடிவுகளை எடுத்துள்ளேன். நான் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களை மிஸ் பண்ணி விட்டேன். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றியை பதிவு செய்தது. நான் அந்த படம் வேண்டாம் என்று வேறொரு படத்தில் நடித்தேன். இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில் நான் நடித்த படம் 2 வாரங்கள் மட்டுமே ஓடிய நிலையில், கே.எஸ் ரவிக்குமார் படம் 25 நாட்கள் ஓடியது. அதன் பிறகு நிம்மதியாக தூங்க முடியுமா.? அதுவரை என்னுடைய முடி நன்றாக தான் இருந்தது. மேலும் அதற்குப் பிறகு நான் மிகவும் கவலைப்பட்டதால் தான் என்னுடைய முடி கொட்டி விட்டது என நகைச்சுவையாக பேசியுள்ளார்..