தமிழ்நாட்டில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக மழையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் புயலின் போது கடுமையாக மழை பெய்த நிலையில் புயல் கரையை கடந்த போது விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதோடு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சி.வெ கணேசன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு ஒரு பெண் வெள்ளம் பாதித்ததை நினைத்து கைக்குழந்தையுடன் அழுது கொண்டிருந்தார். அந்த பெண்ணை பார்த்து அமைச்சர். எதுக்குமா நீ அழுதுட்டு இருக்க என்று கூறி அந்த பெண்ணின் கண்ணீரை துடைத்தார். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கிய அவர் அண்ணன் நான்தான் வந்து விட்டேன் அல்லவா இனி அழக்கூடாது என்று ஆறுதல் கூறியதோடு குழந்தைக்கு பெயர் வைத்தாச்சா? என்ன என்று கேட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் அமைச்சர் மிகவும் அக்கறையுடன் அந்த பெண்ணின் அழுகையை நிறுத்தி ஆறுதல் கூறியது திமுகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.