நாட்டின் பல பகுதிகளில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதி தீவிரமடைந்து வருகிறது. ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் கோடை வெப்பம் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பலவீனமான எல் நினோ நிலைமைகள் இருந்தபோதிலும் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வெப்பநிலை உயரக்கூடும் என்று இந்திய வானியை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் இன்னும் 10-20 நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல வங்கக்கடலோர பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் 20 நாட்களுக்கு மேல் நீடிக்கலாம்.