நீங்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் கவனமாக இருங்கள் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ஏனெனில் டிஜிட்டல் பேமெண்ட் குறித்த புகார்கள் தினசரி அதிகரித்து வருவதாக தெரிவித்து உள்ளது. டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்தும் செயல் முறையானது எந்த அளவுக்கு ஈஸியாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது.

சென்ற ஓராண்டில் ரிசர்வ் வங்கியானது இதுகுறித்து சுமார் 4 லட்சம் புகார்களை பதிவுசெய்துள்ளது. ஆகவே நீங்கள் பணம் செலுத்துவதற்கு டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தினால், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். RBIOSன் புகார்களின் தீர்வு விகிதம் 2020-21ல் 96.59 சதவீதத்தில் இருந்து 2021-22ல் 97.97 சதவீதம் ஆக அதிகரித்து உள்ளது.