காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று 75 வயதில் உடல் நலக்குறைவினால் காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி முதல்வர் ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவன், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, அண்ணன்ஈபிகேஎஸ் இளங்கோவனின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த பற்றுதலை கொண்டிருந்தவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழ்நாடு அரசியல் களத்திற்கு பேரிழப்பாகும் என கூறியுள்ளார்.