சினிமா துறை பொதுவாக மிகப்பெரிய துறை என்பதால் அதில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்களின் வருமானமும் அதிக அளவில் தான் இருக்கும். இந்நிலையில் world of statistics உலக பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடிகர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அதாவது உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் 4-வது இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 770 மில்லியன் டாலர்  ஆகும். கடந்த 4 வருடங்களாக நடிகர் ஷாருகானின் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் அவரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் உலக பணக்கார நடிகர் பட்டியலில் முதலிடத்தில் ஜெர்ரி சீன் ஃபீல்ட் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர் ஆகும். அதன் பிறகு டைலர் பெர்ரி ஒரு பில்லியன் டாலரோடு இரண்டாம் இடத்திலும், டுவைன் ஜான்சன் 800 மில்லியன் டாலரோடு 3-ம் இடத்திலும் இருக்கிறார்கள். இதனையடுத்து 620 மில்லியன் டாலரோடு நடிகர் டாம் குரூஸ் 5-ம் இடத்திலும், 520 மில்லியன் டாலர் ரோடு ஜாக்கிஜான் 6-ம் இடத்திலும், 500 மில்லியன் டாலரோடு ஜார்ஜ் க்ளூனி 7-ம் இடத்திலும் இருக்கிறார்கள். மேலும் 8-ம் இடத்தில் ராபர்ட் டி நீரோ என்ற நடிகர் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர் ஆகும்.