லாட்டரி டிக்கெட்டில் உலகில் இதுவரை யாருக்குமே கிடைக்காத அளவுக்கு பெரிய தொகை ஒருவருக்கு பரிசாக கிடைத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் லாட்டரி விளையாட பவர் பால் மூலம் 2.04 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒருவர் வென்றுள்ளார். இது இந்திய மதிப்பில் 16,800 கோடி ரூபாயாகும்.

இந்த பரிசை எட்வின் காஸ்ட்ரோ என்ற நபர் வென்றுள்ளார். இதுவரை உலகில் யாருக்குமே லாட்டரியில் கிடைக்காத அளவுக்கு பெரிய பரிசு தொகை எட்வினுக்கு கிடைத்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 ஆயிரத்து 800 கோடி ரூபாய் பரிசை வென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என எட்வின் கூறியுள்ளார்.