சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. கோயம்பேட்டில் கடந்த சில நாட்களாகவே காய்கறியின் விலை அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் திடீரென சரிந்தது.

அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 20 க்கும் உருளைக்கிழங்கு 35 க்கும் பெரிய வெங்காயம் 35 க்கும் கத்திரிக்காய் 50 க்கும் முட்டைக்கோஸ் 25 க்கும் பீன்ஸ் 70 க்கும் விற்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரைக்காய் 65 ரூபாய்க்கும் கேரட் 90 ரூபாய்க்கும் முள்ளங்கி 20 ரூபாய்க்கும் வெண்டைக்காய் 30 ரூபாய்க்கு முருங்கைக்காய் 50 ரூபாய்க்கு பீட்ரூட் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதையடுத்து பாகற்காய் 40 ரூபாய்க்கும் புடலங்காய் 30 ரூபாய்க்கு மிளகாய் 50 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும் வாழைக்காய் 1 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சௌசௌ 30 ரூபாய்க்கு இஞ்சி 150 ரூபாய்க்கும் எலுமிச்சை 120 ரூபாய்க்கும் காலிபிளவர் 30 ரூபாய்க்கு கோவக்காய் 25 ரூபாய்க்கும் மாங்காய் 110 ரூபாய்க்கும் சுரைக்காய் 20 ரூபாய்க்கும் குடமிளகாய் 45 ரூபாய்க்கும் கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.