ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 இடங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 455 புகார் வந்ததில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்டுள்ளன எனவும், 14 பணிமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.