மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் இரவு பகலாக கிராமம் கிராமமாக தீவிர பிரச்சாரம் செய்து வருவதோடு கூட்டணி கட்சிகளுக்கும் பரப்புரை மேற்கொள்கிறார். அதிகம் நடந்தபடியும், காரில் அமர்ந்தபடியும் பிரச்சாரம் செய்வதால், அவரின் கால்கள் வீங்கி உள்ளன.

அதை பொருட்படுத்தாமல் வாக்கு சேகரிக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில் உடல்நலத்தை கவனித்து கொள்ளுமாறு தொண்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.