அண்மையில் பான் இந்தியா படமாக ஆதிபுருஷ் ரிலீஸ் ஆனது. இந்த படம் உலகளவில் முதல் 3 நாட்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 4-வது நாளில் இருந்து வசூல் அடிவாங்க துவங்கியுள்ளது. இந்த நிலையில், ஆதிபுருஷ் படத்தில் சீதா கதாபாத்திரம் நேபால் மக்களின் மனதை காயப்படுத்தும் அடிப்படையில் இருக்கிறததாம்.

இதன் காரணமாக இனிமேல் இந்திய திரைப்படங்களை நேபாளில் வெளியிட மாட்டோம் என தடை செய்துள்ளார்களாம். முன்பாக கேஜிஎஃப் திரைப்படம் அங்கு வெளியாகிய சமயத்தில் ரூ. 10 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதோடு தற்போது புஷ்பா 2 திரைப்படம் கண்டிப்பாக ரூ. 20 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.