தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் ஒரு அதிரடி உத்தரவைத் தமிழ்நாடு அரசு தற்பொழுது பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து இ-சேவை மையங்கள் (e-Sevai centers) மற்றும் பொது சேவை மையங்களை (Common Service Centres) அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் (District Collectors) நேரில் சென்று தீவிர ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மிகத் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் பல்வேறு அரசு உதவிகள் மற்றும் தேவைகளுக்காக இ-சேவை மையங்களை நாடும்போது, அவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் எவ்விதத் தாமதமும் இன்றி மிக விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கை கோட்டையிலிருந்து பாய்ந்துள்ளது.

தற்பொழுது  இந்த லேட்டஸ்ட் மக்கள் நலச் செய்தி சோசியல் மீடியா பக்கங்களில் மிக வேகமாகப் பரவி, “சான்றிதழ் வாங்குறதுக்கு இனி அலைஞ்சு திரிய வேண்டியதில்லை .. அரசு எடுத்த இந்த அதிரடி முடிவால இ-சேவை மையங்கள்ல வேலைகள் தற்பொழுது வேற லெவல்ல ஸ்பீடா நடக்கப்போவது உறுதி!” என்று நெட்டிசன்கள் தங்களது பலத்த வரவேற்பு கமெண்ட்டுகளுடன் இந்த நியூஸைத் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.