தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்து விட்டது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டிசம்பரில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பரில் அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதிகபட்சமாக 75 சதவீதம் வரை மழை பெய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.