நியூயார்க்கில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டிகள் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டியில் 6 ரன்கள் வித்யாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால் பாக். வீரர் ‌நசீம் ஷா மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அதாவது வெற்றிக்கு அருகில் வந்தும் அவர்களால் வெற்றி பெற முடியாததை நினைத்து கண்ணீர் வடித்தார். அவரை சக பேட்ஸ்மேன் ஆன ஷாகின் அப்ரிடி தேற்றினார். அதேபோன்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.