சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 250 கோடி மதிப்பீட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங், வணிக வளாகம், தியேட்டர்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் போன்ற கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிறுத்தக்கூடிய வகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் நேற்று 5 திரைகள் கொண்ட தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தியேட்டருக்கு விமான பயணிகள் புதிதாக கட்டப்பட்ட பாலம் மூலம் செல்லலாம்.
இந்த தியேட்டரில் ஒரே நேரத்தில் 1000 பேர் வரை அமர்ந்து படம் பார்க்கலாம். மேலும் வெளிநாடுகளில் உள்ள ஏர்போர்ட்டில் திரையரங்குகள் உள்ள நிலையில் இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் முதலில் தியேட்டர் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக அங்கு அமையாததால் அந்த வாய்ப்பை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.