போக்சோவால் அதிகரிக்கும் தூக்குத்தண்டனை… பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

பாலியல், கொலை வழக்குகளில் தான் இந்திய நீதிமன்றங்கள் அதிகளவில் தூக்கு தண்டனை விதிப்பது தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும்  264 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதில் 121 பேர் பாலியல் குற்றவாளிகளாவர். இதிலும் அரிதான வழக்குகளில் தூக்கு தண்டனை என்பது நடைமுறை ஆனால் அண்மைகாலமாக விசாரணை நீதிமன்றங்கள் விதிக்கும் தூக்கு தண்டனைகள் பாலியல் குற்றங்கள் தொடர்பாக கொலை வழக்குகளில் அதிகம் பேர் தூக்குத் தண்டனைக்கு ஆளாவது தெரியவந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 162 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இருந்து ஒப்பிடுகையில் 2 மடங்கு அதிகமாகும். தூக்குதண்டனைக்கு  கீழ் ஆளானவர்களில் 67 பேர் பாலியல் கொலை வழக்கு குற்றவாளிகள். 2019 ஆம் ஆண்டில் 102 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் 54 பேர் பாலியல் கொலை வழக்கு குற்றவாளிகள்.

கடந்த ஆண்டு பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இதற்கு போக்சோ சட்டமே  காரணம் என்கிறது, வழக்கறிஞர்கள். குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க தடைசெய்யும் போக்சோ சட்டம் 2012 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. 2019ஆம் ஆண்டு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தூக்கு தண்டனைக்கு வகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 16 பேர் மட்டுமே தூக்கில் போடப்பட்டு இருந்தாலும், அவர்களின் தனஞ்செய்  சட்டர்ஜி என்பவர் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்கு ஆளானார். 1990ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கொடிய செயலுக்காக, 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி கொல்கத்தா அலிபோற்  மத்திய சிறையில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா பாலியல் வழக்கில் பவன் குப்தா உள்ளிட்ட 4 பேர் வருகிற 20-ஆம் தேதி தூக்கில் போடப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.