தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி பல கேள்விகளை கேட்க முதல்வர் ஸ்டாலின் அசராது பதில் வழங்கினார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் யார் அந்த சார் என்று கேட்டால் அஞ்சி நடுங்குவது ஏன் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்ட நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே சட்டசபையில் விவாதம் முடிவடைந்துவிட்டது அதற்கான பதிலை முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டதால் தற்போது அதைப்பற்றி பேச வேண்டாம் என்று கூறினார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே சவால் விட்டுள்ளார்.
அதாவது சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் புகார் கொடுத்த மறுநாளே குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால் பொள்ளாச்சி சம்பவத்தில் 12 நாட்கள் கழித்து தான் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. ஒருவேளை இதனை பொய் என்று நீங்கள் நிரூபித்தால் நீங்கள் கொடுக்கும் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் சொன்னது தவறு என்று நிருபிக்க ஆதாரத்தை நீங்கள் கொடுத்தால் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒருவேளை நீங்கள் நிரூபிக்கவில்லை எனில் நான் சொல்லும் தண்டனையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். மேலும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.