ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தணிக்கைக் குழு இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது.
இந்நிலையில் பொள்ளாச்சியிலுள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அஜித் படத்துக்கு ஒரிஜினல் பணம் நோட்டு எப்படி இருக்குமோ அதேபோல் “துணிவு” படத்தின் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் இந்த படம் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வெளியிடப்படுகிறது.
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் துணிவு படத்தை காண பல விதமாக நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர். பொள்ளாச்சியில் வால்பாறை சாலையிலுள்ள தங்கம் தியேட்டரில் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ஒரிஜினலான ரூபாய் நோட்டு போன்று டிக்கெட் அச்சடித்து முதல்நாள் காட்சிக்கு ரசிகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள் படத்தை காண ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தனர்.