மலையாள சினிமாவில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக அறிமுகமானவர்தான் நடிகை சாய் பல்லவி. அந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

தென்னிந்தியாவின் முன்னாடி நடிகையாக மாறிய சாய்பல்லவி தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவு இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.