
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் உடல் நல குறைவினால் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்த நிலையில் அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரும் கடந்த வருடம் உடல்நல குறைவினால் உயிரிழந்துவிட்டார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ள நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும். இந்நிலையில் இந்த தேர்தலில் இம்முறை காங்கிரஸ் போட்டியிடவில்லை.
அதற்கு பதிலாக கூட்டணியில் திமுக போட்டியிடுகிறது. இதேபோன்று நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அதன் பிறகு தமிழக வெற்றி கழகம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்த நிலையில் கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுகவும் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. தற்போது பாஜக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன் பிறகு அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.