தனுஷ் தனது 50-வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜூலை 26ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி நிறுவனமான அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சென்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வாகியுள்ளது. இந்த தகவலை ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தனுஷ் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.