மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக கடந்த ஏப்ரல் 28ல் வெளியான ‘பொன்னியின் செல்வன்-2’ வெளியான 9 நாட்களில் 282 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்திய அளவில் மட்டும் படம் 134 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் படம் 2100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. படம் வெளியான 10 நாட்களில் 500 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்பட்ட நிலையில், அந்த கணிப்பு பொய் ஆகியுள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் த்ரிஷா புகைப்படத்திற்கு சாமியார் ஒருவர் முத்தம் கொடுத்துள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆள பாத்தா டம்மி பீசா இருக்க பயங்கரமான ஆளா இருக்கியேடா என கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.