பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான மந்த்ராவில் 30 நிமிடத்தில் ஆர்டர்களை டெலிவரி செய்யக்கூடிய வகையில் M- Now என்ற அம்சம் அறிமுகமாக உள்ளது. முதலில் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த அதிவேக டெலிவரி மற்ற நகரங்களிலும் கொண்டு வரப்பட உள்ளது. அதன் மூலம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய விரும்புபவர்கள் ஆடைகள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து பயன்பெறலாம்.