புதிதாக அதிக விலை கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்க முடியாத காரணத்தால் சிலர் ஆன்லைனில் போனை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். அவர்களுக்கான ஆலோசனை தான் இது. ஆன்லைனில் சில நேரம் திருட்டுப் போனை மர்ம நபர்கள் தங்களுடைய போன் என்று பொய் சொல்லி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. இந்த போனை வாங்கினால், அதை பறி கொடுத்தோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.

போனில் சிம் கார்டு போட்டதும் விரைந்து வந்து போலீஸ் போனை பறிமுதல் செய்வதோடு உங்களையும் விசாரணைக்கு அழைத்து செல்லும். போலீசிடம் உண்மையை தெரிவித்து நிரபராதி என்று நிரூபித்து மீள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதனால் பழைய போனை வாங்கும்போது அவர் உண்மையான உரிமையாளரா என்பதை உறுதி செய்வது அவசியமாகும். இல்லையென்றால் குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு சிக்கலில் சிக்கி விடுவீர்கள்