ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா என்னும் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.529 கோடி சொத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ரூ.5.30 கோடி மதிப்பிலான நகைகள் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.