
ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்தில் எஸ் வினோத்குமார் தயாரிப்பில் உருவான குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சாந்தி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குடும்பஸ்தன் திரைப்படம் வருகிற 24-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிகண்டன் கூறியதாவது, நடுத்தர குடும்பஸ்தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. நடிகர் அஜித் பல தலைமுறைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அவர் என்றுமே தனது பேஷனை கைவிட்டதில்லை. அதற்கான பலன்கள் கிடைக்கிறது என்பது எனக்கு இன்னும் உத்வேகமாக உள்ளது. இலக்குகளை அடைய தொடர்ந்து உழைத்தால் ஒரு நாள் நமக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் உதாரணமாக உள்ளார் என மணிகண்டன் கூறியுள்ளார்.