விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் விருந்து வழங்க உள்ளார். சென்னை பனையூரில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் அடுத்த வாரம் அந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநாடு மற்றும் பார்க்கிங் வசதிக்காக விவசாயிகளும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும் சுமார் 230 ஏக்கர் நிலம் கொடுத்தனர். இதனால் பனையூரில் இருக்கும் கட்சி அலுவலகத்திற்கு 25 பேரை அழைத்து விஜய் கௌரவிக்க உள்ளார். மேலும் நிலம் தந்தவர்களுக்கு தனது கைகளால் உணவு பரிமாற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.