பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாஹி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் தற்போது நடிகை ஜான்வி கபூர் படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியிட்ட புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது மகிமா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்வி 6 என்ற நம்பருடன் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்துள்ளார். இந்த நம்பர் கொண்ட உடையை அணிந்ததற்கான காரணத்தையும் ஜான்வி கூறியுள்ளார். அதாவது 7 என்ற நம்பர் கிரிக்கெட் வீரர் தோனிக்கு மட்டுமே சொந்தம். அது தோனியின் ஜெர்சியில் மட்டுமே இருக்கக்கூடிய அவருடைய நம்பர் ஆகும். இதேபோன்று மகிமா கதாபாத்திரத்திற்கும் ஒரு நம்பரை தேர்வு செய்ய வேண்டி இருந்ததால் என்னுடைய லக்கி நம்பர் ஆன 6 வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த எண் அதிஷ்டத்தை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.