அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித் தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை கற்றுக்கொள்ளுங்கள் என்று விஜய் பேசியது மிகவும் நல்ல விஷயம் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இளைய தலைமுறைக்கு விஜய் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவரே சொல்லாத போது நான் எப்படி சொல்ல முடியும்? என நடிகர் சத்யராஜ் கூறினார்.