கர்நாடக அரசின் ஒப்புதலுடன் நந்தினி பால் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் பால் மற்றும் தயிர் விலை இரண்டாவது முறையாக உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விலை அமலுக்கு வரவுள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நந்தினி நிறுவனத்தின் பிரபலமான 1 லிட்டர் பனீர் பாக்கெட்டின் விலை ரூ.44 இருந்து ரூ.48 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் உற்பத்திச்செலவுகள், பதப்படுத்துதல் செலவுகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக கர்நாடகா கால்நடைத்துறை அமைச்சர் கே.வெங்கடேஷ் தெரிவித்தார். புதிய விலைகளால் உற்பத்தியாளர்களுக்கு நேரடி நலன்கள் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.