தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக நேற்று கோயம்புத்தூரில் இருந்து களப்பணியை தொடங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்களின் செயல்பாடுகளை அறிவதற்கும், ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தெரிந்து கொள்வதற்கும் முதல்வர் ஸ்டாலின் துறை வாரியாக ஆய்வு நடத்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த ஆய்வின் போது அந்தந்த துறை செயலர்களுக்கு பதிலாக அமைச்சர்களே திட்டங்கள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடங்கள் இருக்கும் நிலையில் சரிவர செயல்படாத அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்காகவே தற்போது இந்த பணிகளை முதல்வர் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது