அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் நடப்பாண்டிலும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் தொடர்ந்து 4 வருடங்களாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் வகிக்கிறார். இவர் 260 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குகிறார். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த மெஸ்ஸியின் சம்பளம் குறைந்ததால் தற்போது 3-ம் இடத்திற்கு சென்றுள்ளார். இவருடைய சம்பளம் 135 டாலர்.

அதன்பிறகு 2-வது இடத்திற்கு பிரபல கோல்ப் வீரர் ஜான் ரஹ்ம் 218 மில்லியன் டாலர் சம்பளத்துடன் முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து 128.2 மில்லியன் டாலருடன் பிரபல கூடை பந்து வீரர் லே பிரோன் ஜேம்ஸ் 4-வது இடத்திலும், 111 மில்லியன் டாலருடன் கூடைப்பந்து வீரரான ஜியோன்னிஸ் ஆன்டேடோகவுன்ம்போ 5-வது இடத்திலும், 110 மில்லியன் டாலர் சம்பளத்துடன் கால்பந்து வீரர் எம்ப்பாவே 6-வது இடத்திலும், கால்பந்து வீரர் நெய்மர் 108 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 7-ம் இடத்திலும் இருக்கின்றனர். மேலும் கால்பந்து வீரர் கரின் பென்சிமா 106 மில்லியன் டாலருடன் 8-ம் இடத்திலும், கூடைப்பந்து வீரர் ஸ்டீபன் கர்ரி 102 மில்லியன் டாலருடன் 9-ம் இடத்திலும், அமெரிக்க கால்பந்து வீரர் லாமர் ஜாக்சன் 100.5 மில்லியன் டாலருடன் பத்தாமிடத்திலும் இருக்கிறார்கள்.