தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தன்னுடைய முதல் படத்தில் தனக்கான முத்திரையை பதித்த ஜெயம் ரவி அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகராக உயர்ந்தார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் 2, சைரன், இறைவன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என ஜெயம் ரவி அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நரைத்த தாடியுடன் இருக்கிறார். மேலும் இந்த புகைப்படம் இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் ஜெயம் ரவியின் புதிய லுக்கை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.