பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா வழக்கமாக எப்பொழுதும் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ஞாயிற்றுக்கிழமை தனது 30வது பிறந்தநாளை வெரைட்டியாக கோல்டன் கேக் வெட்டி கொண்டாடினார். கேக் தயாரிப்பில் தூய 24 காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டது.

அந்த கேக்கின் விலை என்ன தெரியுமா? 3 கோடி. ஊர்வசியின் பிறந்தநாளையொட்டி, ராப் பாடகர் யோயோ ஹனி சிங் அந்த கேக்கைக் கொண்டு வந்தார். ஊர்வசி தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.