தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சியும், வாரிசு படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகளும் நடைபெற இருக்கிறது.

இந்த 2 காட்சிகளுக்கும் குறைந்தபட்ச கட்டண தொகை ரூ. 1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு 8 மணி காட்சிகளில் இருந்து தான் அரசு நிர்ணயத்த கட்டணத்தை வசூலிக்க போகிறார்களாம். சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு 2000 முதல் 3000 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியாத பட்சத்தில் ஒருவேளை உண்மையாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.