இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக ஆர்த்தி ஆலவத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த  2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 20 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் சமூக வலைதளத்தில் ஒருவருக்கொருவர் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர். ‌ மேலும் இதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் கூறப்படுகிறது.