
நடப்பு வருடத்துக்கான IPL சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி அன்று துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை செய்ய இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இப்போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு,சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலாவில் உள்ளிட்ட 12 மைதானங்களில் IPL போட்டிகள் நடைபெறுகின்றன.
கடந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியானது சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஜியோ சினிமா ஆப்பில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளன. போனில் ஜியோ சினிமா அப்ளிகேஷன் வைத்திருப்பவர்கள் யாவரும் இலவசமாக போட்டிகளை கண்டு களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.