பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் ஆர்சி 15 திரைப்படத்தில் நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகை க்யாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். ஆர்சி 15 படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகைக்காக அத்வானிக்கும் சித்தார்த் மல்கோத்ராவுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்ற நிலையில் நடிகர் ராம்சரண், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் சங்கர் மற்றும் ஆர்சி15 படக்குழுவினர் பூத்தூவி கியாரா அத்வானி மற்றும் சித்தார்த்‌ மல்கோத்ரா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ  தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.