தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் .
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கில் முன்னணி நடிகர் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீரசிம்ரேட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த இரண்டு படங்களுக்கு ப்ரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் ஸ்ருதிஹாசன் பாலகிருஷ்ணாவின் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்த கேள்விக்கு சுருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அதில் எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு மனரீதியாக சில பிரச்சினைகள் உள்ளது. வீட்டில் அல்லது படப்பிடிப்பு தளத்திலோ நான் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவேன். அதிக மன உளைச்சல் அடைந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வேன் என்று பகிர்ந்துள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருடைய நோய் குணமாக இறைவனை பிரார்த்திப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.