
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். கடந்த வருடம் வெளியான மகாராஜா படம் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பதால் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும். உலகநாயகன் கமலஹாசன் உடன் விக்ரம் படத்திலும், இளைய தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்திலும் வில்லன் ரோலில் நடித்துள்ளார் .
இதனையடுத்து அஜித்தோடு எப்போது இணைந்து நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அஜித்துடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதாவது,” அஜித்துடன் எப்போது படம் பண்ணுவீங்க? என்று போன இடத்தில் எல்லாம் கேள்வி கேட்கிறார்கள். இதுவரைக்கும் நடந்தது எதுவும் நான் திட்டமிடவில்லை. ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நடக்கும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நடக்கிறதா இருந்தது. ஆனா நடக்கவில்லை… விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.