வாழ்க்கையில் கண்டிப்பாக சிரிக்க வேண்டிய தருணம்,குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

எப்போதும் புன்னகை முகத்தோடு இருப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள். இப்படியான முகம், அப்படி ஒரு வாழ்க்கை அனைவருக்கும் அமைந்து விடாது. சொல்லப் போனால், எப்போதும் புன்னகை முகத்தோடு காட்சி அளிப்பவர்களுக்கே, உள்ளுக்குள் எத்தனை சோகங்கள் இருக்கும் என்பது யாருக்கு தெரியும்.

இப்படி நம் அனைவருக்கும் வரமாக கிடைக்கப்படும் ஒவ்வொரு சிரிப்பிற்கு பின்னாலும், ஒரு வலி மறைக்கப்பட்டு வரும் அல்லது அது மறுத்து போகும் அந்த கணத்திற்கு மட்டும். இப்படி நம் வலிக்கு மருந்தாக இருக்கும் சிரிப்பு எவ்வளவு முக்கியமோ, நம்மை சிரிக்க வைப்பவர்களும் அவ்வளவு முக்கியம். சச்சின் திரைப்படத்தில் விஜய் அவர்கள் மற்றவர்களை காயப்படுத்துகிற சின்ன சிரிப்பு கூட தப்புதான் என்ற வசனம் ஒன்றை கூறுவார்.

அதே போல நம்மை ஒருவர் சிரிக்க வைக்கும் போது நாம் சிரிக்காமல் அவரை கடந்து சென்றால்,  அது அவரை மிகவும் காயப்படுத்த கூடும். அதுவும் தவறு தான். அதாவது நீங்கள் அதீத சோகத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அச்சமயத்தில் நீங்கள் சோகத்தில் இருப்பதை உணர்ந்து ஒருவர் உங்களிடம்  நகைச்சுவையாக பேசி சிரிக்க வைக்க முயல்கிறார் என்றால்,

அப்போது கண்டிப்பாக சிரியுங்கள். அவர் சொல்கின்ற காமெடியோ அல்லது ஏதேனும் ஒரு விஷயமோ உங்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தா விட்டாலும் கூட நீங்கள் சிரியுங்கள். ஏனெனில் உங்களை வலிகளில் இருந்து மீட்டெடுக்க அப்படி ஒருவர்  தேவை. அவரால் மட்டுமே அது முடியும். அவரிடமும் சிரிக்காமல் நீங்கள் கடந்து சென்றீர்கள் என்றால் உங்களை உண்மையாக மன நிறைவுடன் சிரிக்க வைத்து ஆனந்த கண்ணீர் வர வைக்க வேறு யாராலும் முடியாது.