செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, எல்லாரும் என்னை எதிர்க்கிறீங்க.  அது தான் என் வளர்ச்சிக்கு காரணம். எல்லாரும் சேர்ந்து ஒரு மரத்த கல் எடுத்து அடிச்சீங்கன்னா…  அந்த மரம் வளரும். என்னை ரெண்டரை வருஷம் கல்லை எடுத்து அடிக்கிறீங்க…. புதுசா ஒருத்தன் வந்து இருக்கான்…

வித்தியாசமா இருக்கான்… அரசியல்வாதி மாதிரி இல்ல….  பிகேவ் பண்றது வேற…  பேச்சு வேற… செய்கை வேற… இவன் டீலிங் வேற… அப்படித்தான் நான் இருப்பேன்…  நான் அதை மாத்திகிட்டேன்னு வச்சுக்கோங்க…. நானும் அரசியல்வாதியா மாறிடுவேன். அப்புறம் நானும் பத்தோடு பதினொன்னா…  கர வேட்டி கட்டிட்டு சைடுல நிக்கணும். அந்த மாதிரி இருக்க விரும்பல.

தனித்தன்மையா….  என்னுடைய கொள்கையில நிக்கிறேன். சில பேரை எதிர்க்கணுமா..? எதிர்க்க தயாரா இருக்கேன். பல பேரை எதிர்த்துட்டேன்… இன்னும் நாலு பேரை எதிர்க்கணுமா..?  அதையும் எதிர்ப்போம். உன்னை நீங்க புரிஞ்சுக்கணும்…  பாலிடிக்ஸ் என்பது அதற்கு பல கோணங்கள்.. பல பாதைகள்… அது பல ஆறுகள் மாதிரி… பைனலா எல்லாம் போய் கடலில் தான் இணைய போது…  அடிப்படையில் நான் விவசாயி என தெரிவித்தார்.