
தமிழ் திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு. இவர் விஜய் டிவியில் ஆரம்ப காலத்தில் சில காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு வெள்ளித்திரையில் முன்னணி காமெடியனாக வலம் வந்த இவர் தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் வெளியாக உள்ள கஜானா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் மேடையில், யோகி பாபு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறாரா? எனக் கேட்டார் அதற்கு அங்கிருந்தவர்கள் இல்லை என்று பதில் அளித்தனர்.
பிறகு கூட்டத்தில் இருக்கிறாரா? என கேட்டார். மேலும் ஒரு நடிகனுக்கு தான் நடித்த திரைப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இல்லை என்றால் நடிகனாக இருக்க தகுதியே இல்லை எனவும், ஒரு பிரமோஷனுக்கு வர மாட்டேங்கிறீங்களா? இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு காலம் பதில் சொல்லும். அவருக்கு 7 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் அவர் பிரமோஷனுக்கு வர மாட்டார்.
7 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தால் யோகி பாபு ப்ரமோஷனுக்கு வந்து இருப்பார் இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம். தன்னுடைய படத்தின் பிரமோஷன். அதற்கு அவங்க சொல்றாங்க, இவங்க பண்றாங்க என்ன வேணாலும் நடக்கட்டுமே தன் பணம் என்பது ஒரு நடிகனுக்கு தன்னுடைய குழந்தை மாதிரி. ஒரு சிறந்த நடிகனுக்கு அந்தப் பொறுப்பு இருக்க வேண்டும் என தனது ஆதங்கத்தை மேடையில் வெளிப்படுத்தினார்.
மேலும் கஜானா திரைப்படத்தின் ப்ரமோஷனுக்கு யோகி பாபு எதற்காக வரவில்லை என்பது குறித்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல யோகி பாபு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.