பிரபல யூடியூபர் இர்பான் என்றாலே சர்ச்சை என்று ஆகிவிட்டது. உணவுகளை ரிவ்யூ செய்யும் இவர் தற்போது பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரையும் தேடி பேட்டி எடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவர் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவுகிறேன் என்று கூறி, அவர்களுக்கு உடைகள் வாங்கிக் கொண்டு தனது மனைவியுடன் சேர்ந்து சென்னையில் உள்ள பல இடங்களுக்கு சென்று கொடுத்துள்ளார்.

அப்போது இவர்கள் காரில் இருந்தபடியே உடைகளை கொடுத்துள்ளனர். அப்போது சிலர் தனது கைகளை காருக்குள் நீட்டி உள்ளனர். இதை பார்த்த இர்ஃபான் காருக்குள் கைகளை விடாதீர்கள் என்று காட்டமாக கூறியுள்ளார். அது மட்டும் இன்றி, உதவி பொருளை வாங்கும் போது சிலர் அவரது மனைவியை தொட்டு விட்டார்கள் என்றும், அவரது கைகளை பிடித்து இழுத்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பலரும் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக வி ஜே பார்வதி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இவர் பெரிய ஜமீன் பரம்பரை, காருக்குள் இருந்து கொண்டே தான் மக்களுக்கு சேவை செய்வார்.

தனது மனைவியை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் வீட்டிலேயே விட்டுவிட்டு வர வேண்டியதுதானே. இந்த புது பணக்காரங்க இருக்காங்க பாருங்க எப்பா இவனுங்க பண்ற கூத்து இருக்கே தன்னிடம் பணம் இருக்கிறது என்பதை எப்படி கேவலமாக வெளிகாட்டுகிறார்கள். இது போன்ற நேரங்களில் தான் அவர்களது புத்தி வெளிய வருகிறது.

பெரும்பான்மையான சமூகம் இது போன்ற கேவலமான மனநிலையோடு தான் இருக்கிறது. நாடு நாசமாக போக வாழ்த்துக்கள் என்று இர்பான் நடவடிக்கைகள் குறித்து காட்டமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.