
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தனது 25 வது படம் வெளியாகுவதற்கு முன்னரே வசூல் மன்னராக மாறியுள்ளார். தற்போது இவரது நடிப்பில் 3 படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் உலக அளவில் ரூ.350 கோடியை வசூலித்தது. அந்த வகையில் ரஜினி, விஜய், கமல் ஆகியோருக்கு பின்னர் ரூ.350 கோடி வசூல் செய்த நடிகராக மாறினார்.
இந்நிலையில் தற்போது இவர் மதராஸி என்ற ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. அதேபோன்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. அதோடு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பக்கா கமர்ஷியலான படத்திலும் கமிட் ஆகி உள்ளார்.
இந்நிலையில் இவ்வளவு பிசியாக இருந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அட்டகாசமான செயலை செய்துள்ளார். அதாவது தலைநகர் சென்னை மற்றும் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள வண்டலூர் மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஸ்ரேயர் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் தத்தெடுத்துள்ளார்.
அதாவது 3 மாதங்களுக்கு ஸ்ரேயர் மற்றும் யுகாவின் பராமரிப்பு செலவு மற்றும் உணவுச் செலவு ஆகியவற்றை சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார். இதற்கு தமிழ்நாடு அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.