உலக புள்ளியியல் தினம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அக்டோபர் ஐந்தாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் புள்ளி விவரங்களின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. சேவை, தொழில்முறை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் மதிப்புகளின் அடிப்படையில் உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களை நிறைவேற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இறுதியாக உலக புள்ளியியல் தினம் 2020 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி அடுத்ததாக கொண்டாடப்படும்.

கல்வி, ஆராய்ச்சி மற்றும் சிவில் சமூகம் மற்றும் மனிதர்களின் வளர்ச்சியில் புள்ளி விவரங்களின் முக்கியத்துவம் என்பது அளப்பரியது. எந்த ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் புள்ளி விவரங்கள் இன்றியமையாதவை. சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் விதமாக மிகப்பெரிய அளவிலான தரவுகளை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விளக்குதல் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக உலக புள்ளியியல் தினம் அனுசரிக்கப்படுகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐநா பொது சபையின் 41வது அமர்வில் ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையத்தால் உலக புள்ளிகள் தினத்தை கடைபிடிப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. மில்லினியம் வளர்ச்சி இலக்குகளின் முடிவுகள் மற்றும் கண்காணிப்பு அமலாக்கம் இதை ஒப்புக்கொண்டு பொதுச் சபை 2010 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக முதல் உலகப் புள்ளியியல் தினமாக நியமித்தது.